பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0431/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 431/2023

      கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பேராசிரியர், டாக்டர், கலாநிதி, வித்யாகீர்த்தி, வித்யாஜோதி, தேசபந்து, தேசகீர்த்தி, தேசமான்ய, விஷ்வகீர்த்தி மற்றும் தேசசக்தி போன்ற ஒவ்வொரு கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/ பதவிகளை அளிப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ள அரச நிறுவனங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு கௌரவ நாமம்/கௌரவ பட்டம்/ பதவி வழங்கப்படும் போது பரிசீலிக்கப்படும் கல்வி மற்றும் இதர தகைமைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) மேற்குறிப்பிட்ட கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/ பதவிகளுக்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இதர கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/பதவிகள் உள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவற்றை வழங்கும் நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/பதவிகளை வழங்குகின்ற இலங்கையின் தனியார் நிறுவனங்கள்/அமைப்புகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனம்/அமைப்பினால் வழங்கப்படுகின்ற கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/பதவிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனங்கள்/அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரச செயன்முறையொன்று உள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி செயன்முறை யாதென்பதையும்;

      (v) கௌரவ நாமங்கள்/கௌரவ பட்டங்கள்/பதவிகளை வழங்கிய பின்னர் குறித்த ஆட்கள் தொடர்பாக பின் ஆய்வு மேற்கொள்ளும் செயன்முறையொன்று உள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அச் செயன்முறை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-04-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks