பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
432/2023
கௌரவ புத்திக பத்திறண,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற பால்மா வகைகளில் டிசீடி மெலமைன், செயற்கை லெக்டோஸ், பன்றி எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் மனித உடலுக்கு ஒவ்வாத பிற இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரிசோதனைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம்/ நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) அத்தகைய நிறுவனம்/நிறுவனங்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளுடன் தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) சர்வதேச தரநியமங்களுக்கு இயைபாக அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தேவையான வசதிகளை அந்த நிறுவனம் / நிறுவனங்கள் கொண்டுள்ளனவா என்பதையும்;
(v) இன்றேல், அந்த வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேலே (அ)(i) இல் தெரிவிக்கப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பால்மா வகைகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-27
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-27
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks