பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
437/2023
கௌரவ புத்திக பத்திறண,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொங்கல, ஹேஸ்வத்தைக்கு அருகில் கிங் கங்கையின் நீரேந்துப் பிரதேசமானது இயந்திரங்களைக் கொண்டு வெட்டி துப்பரவு செய்யப்படுகிறது என்பதையும்;
(ii) கொங்கல மலையின் உச்சி வரை விசாலமான பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட சுற்றாடல் அழிவினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கொங்கல சுற்றாடல் தொகுதிக்குரிய இரண்டாயிரத்து ஐநூறு ஹெக்டயர் காணிகளை சிங்கராஜ வனாந்தரத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) கொங்கல சுற்றாடல் தொகுதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks