பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
474/2023
கௌரவ புத்திக பத்திறண,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தொழிற்படும் வாடகை வாகனங்கள் மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்கும் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) 2017.01.01 ஆம் திகதி தொடக்கம் 2021.12.31 ஆம் திகதி வரை மேற்படி கம்பெனி ஒவ்வொன்றினாலும் ஈட்டப்பட்ட வருமானம், ஒவ்வோராண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை ரூபாய் என்பதையும்;
(iii) மேற்கூறிய காலப்பகுதியில் அத்தகைய கம்பெனி ஒவ்வொன்றினாலும் செலுத்தப்பட்ட வரிப் பணம் ஒவ்வோராண்டு வாரியாக வெவ்வேறாக எத்தனை ரூபாய் என்பதையும்;
அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(ஆ) (i) வாடகை வாகனகள் மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்க வெளிநாட்டுக் கம்பெனிகள் இணைந்துள்ளதன் காரணமாக, இலங்கையில் அந்தச் சேவைகளை வழங்கும் நபர்களும் கம்பெனிகளும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) இலங்கையில் தொழிற்படும் வாடகை வாகன சேவையை ஒழுங்குறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks