பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2078/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.

    1. 2078/ ’11

       

      கெளரவ அப்துல் ஹலீம்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    கண்டி மாவட்டத்தில், அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில், பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு. ஏ. எச். எம். நசீர் 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) தமிழ்மொழி பேசும் பெரும்பான்மையான முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் (68%) வசிக்கும் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவுக்கு தமிழ்மொழி மூலம் கடமையாற்றக்கூடிய பிரதேச செயலாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-01-20

கேட்டவர்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks