பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
688/2023
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பழுகாமம் பிரதேச வைத்தியசாலை இதுவரை DH - C தரம் வரை மாத்திரமே தரமுயர்த்தப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வைத்தியசாலையை DH-B அல்லது A தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) மேற்படி வைத்தியசாலையை DH -B அல்லது A தரத்திற்கு தரமுயர்த்தப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவுக்குத் தேவையான உபகரணங்கள் (CTG machine, warmer) இன்மையால் கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்;
(ii) அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான உபகரணங்கள் எதுவும் வைத்தியசாலையில் இல்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) (i) ஆமெனில், மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி உபகரணங்கள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-27
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-27
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks