E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0691/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

    1. 691/2023

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     மட்டக்களப்பு மாவட்டத்தின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் கடந்த “நல்லாட்சி” அரசாங்கக் காலத்தில் வர்த்தக மையமொன்று நிர்மாணிக்கப்பட்டது என்பதையும்;

      (ii) இதுவரை அந்த வர்த்தக மையம் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்படி வர்த்தக மையத்தை இதுவரை திறந்துவைக்காததற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) அந்த வர்த்தக மையத்தை திறந்துவைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iii) அவ்வாறாயின், அந்த வர்த்தக மையம் திறந்துவைக்கப்படும் திகதி யாது என்பதையும்;

      (iv) மேற்படி வர்த்தக மையத்தை பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) அவ்வாறாயின், அந்த நிகழ்ச்சித்திட்டம் யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-23

பதில் அளித்தார்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks