பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
693/2023
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் காஞ்சிரங்குடா, பாவற்கொடிச்சேனை, பன்சேனை மற்றும் இலுப்படிச்சேனை போன்ற கிராமங்களுக்கு இதுவரை குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை என்பதையும்;
(ii) இதனால் அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கிராமங்களுக்கு குடிநீர் வசதியினை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், மேற்படி கிராமங்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-06
கேட்டவர்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks