E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0817/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

    1. 817/2023

      கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களின் எண்ணிக்கை வெவ்வேறாகவும்;

                 (ii)    இலங்கைப் பொலிஸ் துறையில் பணியாற்றும் பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கையும்;

      (iii) அந்த எண்ணிக்கை, பொலிஸ் மா அதிபர் தொடக்கம் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி வரை ஒவ்வொரு பதவி வாரியாக வெவ்வெறாகவும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு பதவியையும் வகிக்கின்ற பெண் பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாகவும்;

      யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) முக்கிய பிரமுகர் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மொத்த பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) இவர்களில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத பிரமுகர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டு்ள்ள பொலிஸ் அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (iii) மேற்படி (ii) இல் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத ஏனைய பிரமுகர் தொகுதிகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-07

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-23

பதில் அளித்தார்

கௌரவ டிரான் அலஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks