E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0819/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

    1. 819/2023

      கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கணவரின் மரணம்/கைவிட்டுச் செல்லுதல் மற்றும் வேறு காரணங்களினால் இலங்கையில் கணிசமானளவு பெண்கள் தமது குடும்பப் பொறுப்பை ஏற்று குடும்பத் தலைவர்களாக உள்ளார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வாறு குடும்பத் தலைவர்களாக செயற்படும் பெண்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி பெண்களுக்கு நிவாரணமளிப்பதற்கு வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

      (iv) கணவரின் மரணம்/ கைவிட்டுச் செல்லுதல் மற்றும் வேறு காரணங்களினால் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடும்ப அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மரணம்/ கைவிட்டுச் செல்லுதல் மற்றும் வேறு காரணங்களினால் தமது மனைவியின்றி கணவரால் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்ற குடும்ப அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி குடும்ப அலகுகளுக்கு நிவாரணமளிப்பதற்கு செயற்படுத்தப்படும் வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-22

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-08

பதில் அளித்தார்

கௌரவ கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks