E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0853/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி வலேபொட, பா.உ.

    1. 853/2023

      கௌரவ காமினி வலேபொட,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அளிக்கப்பட வேண்டுமென தற்போதைய அரசாங்க முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதை அறிவாரா;

      (ii) தற்போது மத்திய அரசாங்கத்தின் வசமுள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா;

      (iii) இதன் காரணமாக தற்போது இலங்கை பொலிஸார் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுக்கு உறப்படும் செலவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா;

      (iv) ஆமெனில், அவ்வாறு திருத்தப்படும் நிதித்தொகை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் தற்போதுள்ள இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் யாவை;

      (ii) மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான தத்துவம் நேரடியாக மாகாண பொலிஸாருக்கு உரித்தாகுமா;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-08

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks