E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0859/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

    1. 859/2023

      கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொவிட்-19 காரணமாக இறந்த உடல்களின் தகனம் தொடர்பாக 'நிபுணர்களின் குழு' ஒன்றினால் சுகாதார அமைச்சு அதன் கொள்கை தொடர்பாக பிழையாக வழிகாட்டப்பட்டதாக 2022.11.29 ஆம் திகதி சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட கூற்றை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) மேலே குறிப்பிடப்பட்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவா என்பதையும்;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) மேலே சொல்லப்பட்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவாயின் —

      (i) விசேடமாக கொவிட்-19 காரணமாக இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் பற்றிய அதன் விதப்புரைகளையும்;

      (ii) நியமன அதிகாரியையும்;

      (iii) விசாரணை நியதிகள் அத்துடன்/அல்லது ஆணையையும்;

      (iv) உறுப்பினர்களின் பெயர்களையும் அவர்களின் பதவிகளையும்;

      (v) தவிசாளரின் பெயரையும்;

      (vi) அது தொடர்ச்சியாக கூடுகின்றதா என்பதையும்;

      (vii) இன்றேல், அது கடைசியாக கூடிய திகதியையும்;

      (viii) இற்றை வரை நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கையையும்;

      (ix) கூட்டங்கள் நடைபெற்ற இடத்தையும்;

      (x) ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமை வகித்த தனிப்பட்ட ஆட்களின் பெயர்களை வெவ்வேறாகவும்;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-18

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks