பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
861/2023
கௌவர சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 'கொவிட்-19 என சந்தேகிக்கப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பற்றிய 'தற்காலிக சிகிச்சைக்குரிய நடைமுறை வழிகாட்டல்கள்' பற்றிய வெளியீட்டை அவர் அறிவாரா;
(ii) அந்த வெளியீட்டிற்கு உள்ளடக்கம் மற்றும் விதப்புரைகள் ஆகியவற்றை வழங்கிய நிபுணர்களின் பெயர்கள்;
(iii) நிபுணத்துவ வளவாளர்களாக சேவையாற்றிய போது அவர்கள் இணைக்கப்பட்டிருந்த நிறுவனங்கள் மற்றும் பதவிகள்;
(iv) அவர்களை நியமிப்பதற்கான பொறுப்புவாய்ந்த அதிகாரி;
(v) அவர்களை தெரிவுசெய்வதற்காக பின்பற்றப்பட்ட மூலப்பிரமாணம்/அடிப்படை;
ஆகியவற்றை இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிடப்பட்ட வெளியீட்டின் 7 ஆவது பிரிவைப் பற்றி அவர் அறிவாரா;
(ii) மேலே குறிப்பிடப்பட்ட பிரிவில் காணப்படும் உள்ளடக்கம் மற்றும் விதப்புரைகள் ஆகியவற்றிற்கான பொறுப்புவாய்ந்த குறிப்பிட்ட நிபுணத்துவ வளவாளர்களின் பெயர்கள்;
(iii) பிரிவு 7 இல் காணப்படும் உள்ளடக்கம் மற்றும் விதப்புரைகள் ஆகியவற்றை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட செயன்முறை, ஆவணங்கள் மற்றும் உசாத்துணைகள் ஆகியவற்றை வெவ்வேறாகவும்;
(iv) பிரிவு 7 இல் காணப்படும் விதப்புரைகள் உள்ளூர் அல்லது சர்வதேச மருத்துவ ஒழுக்கவியல் மற்றும் மருத்துவ மானுடவியல் நிபுணர்களின் தொழில்சார் அபிப்பிராயத்திற்கு உட்படுத்தப்பட்டதா;
என்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-23
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks