E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2146/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

    1. 2146/ ’11

       

      கெளரவ வை.ஜி.பத்மசிறி,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 1000 பாடசாலைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்,  5000 முதனிலை ஊட்டப் பாடசாலைகளை  அபிவிருத்தி செய்தல் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளதால், அந்த கருத்திட்டத்துக்கு ஏற்புடைய வகையில்  உத்தேசிக்கப்பட்ட ஊட்டப் பாடசாலைகளுக்கு அருகாமையில் உள்ள  இரண்டு சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்கள் (பாலர் பாடசாலைகள்) வீதம் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பாரா;

      (ii) அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி பாடநெறிகளை வழங்குவாரா;

      (iii) மேற்படி சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்களுக்கு  தேவையான பெளதீக வசதிகளை வழங்குவாரா

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-05-08

கேட்டவர்

கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks