பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2154/ ’11
கௌரவ தயாசிறி ஜயசேகர,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை தேயிலைச் சபை ஈட்டிய இலாபம் அல்லது அடைந்த நட்டம் வருடாந்த அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(ii) தற்போது தேயிலைச் சபையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இவர்களது சம்பளம் செலுத்துவதற்கு மாதாந்தம் செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனம் பேணிவரப்படும் இடத்தின் முகவரி யாதென்பதையும்;
(ii) மேற்படி இடம் வாடகை, குத்தகை அல்லது நிரந்தர அடிப்படையில் பெறப்பட்டதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி இடத்திற்காக மாதாந்தம் அல்லது வருடாந்தம் செலுத்தப்படும் வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இலங்கை தேயிலைச் சபைக்குரிய சொத்துக்கள் யாவை என்பதையும்;
(ii) தற்போது மேற்படி நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாயிருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி நிறுவனத்தை குத்தகைக்கு விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-12
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-12
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks