E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1575/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1575/2023

      கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாந்தோட்டை, பூநகரி, சியம்பலாண்டுவை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் சூரியசக்தி பூங்காக்கள் இன்றளவில் அமைக்கப்பட்டுள்ளனவா;

      (ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு சூரியசக்தி பூங்காவிலிருந்தும் தேசிய மின்சக்தி முறைமைக்கு வழங்கப்படும் மின் அலகுகளின் எண்ணிக்கை மெகாவாட்களில் வெவ்வேறாக யாது;

      (iii) மேற்குறிப்பிட்ட சூரியசக்தி பூங்காக்கள் இன்றளவில் நடைமுறைப்படுத்தப் படவில்லையெனில், அவ் ஒவ்வொரு சூரியசக்தி பூங்காவினதும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் வெவ்வேறாக யாது;

      (iv) மேற்படி ஒவ்வொரு சூரியசக்தி பூங்காவினதும் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி வெவ்வேறாக யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-04-25

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks