E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1577/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1577/2023

      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இன்றளவில் நிறுவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அந்தச் சங்கங்களுக்கு உட்பட்டதாக நிறுவப்பட்டுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) குறித்த வங்கி முறைமையில் இன்றளவில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) குறித்த வங்கி முறைமையிலுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் பெறுமதி தனித்தனியாக யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) கூட்டுறவு கிராமிய வங்கி முறைமைக்கென தானியங்கி டெலர் இயந்திரங்கள் மற்றும் அட்டை வசதிகள் காணப்படுகின்றனவா என்பதை அவர் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks