E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1583/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1583/2023

      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இரத்தினக் கற்களின் அளவு கேரட்களின் அடிப்படையில் யாது என்பதையும்;

      (ii) அவற்றை ஏற்றுமதி செய்துள்ள ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இரத்தினக் கல் ஏற்றுமதியினால் ஈட்டப்பெற்ற வருமானம் ஒவ்வோராண்டு வாரியாக தனித் தனியாக எவ்வளவு என்பதையும்;

      (iv) அந்த வருமானம் நாட்டுக்கு முழுமையாக கிடைத்துள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கைக்கு வேறு நாடுகளிலிருந்து இரத்தினக் கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அத்தகைய இரத்தினக் கற்களின் வகைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks