E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1588/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1588/2023

      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரச ஊழியர்கள் ஓய்வூதிய உரித்தைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட விண்ணப்பப் படிவங்களை ஓய்வூதியத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவர்கள் பணியாற்றியுள்ள முந்தைய சேவை நிலையங்களில் விதவைகள் மற்றும் அநாதைகள் பங்களிப்பு நிதி அறவீடு செய்யப்பட்டுள்ளதாக அத்தாட்சிப்படுத்த வேண்டுமென சுற்றுநிருபமொன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) அதன் காரணமாக ஓய்வுபெறும் அதிகளவான அரச ஊழியர்களுக்கு தமது ஓய்வூதிய உரித்தினைப் பெற முடியாதுள்ளது என்பதையும்;

      (iii) சில அரச ஊழியர்கள் பணியாற்றிய முந்தைய சேவை நிலையங்கள் இன்றளவில் மூடப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிடப்பட்ட சுற்றுநிருபத்தின் அடிப்படையில் முந்தைய சேவை நிலையங்களிலிருந்து பெறப்பட வேண்டிய சான்றிதழ்களை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) 1980 ஆம் ஆண்டின் பின்னர் சகல பெண் மற்றும் ஆண் அரச ஊழியர்களும் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டுமென்பதாலும் மேற்படி ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து பங்களிப்பு நிதி அறவிடப்படுவதாலும் மேற்படி (அ) (1) இன் பிரகாரம் மீண்டும் அத்தாட்சிப்படுத்தல் அவசியமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-23

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-23

பதில் அளித்தார்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks