பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1616/2023
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1996 ஆம் ஆண்டு 947/13 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை மூலம் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முத்துராஜவல சரணாலயத்தின் எல்லைகள் இதுவரையிலும் அடையாளமிடப்படவில்லையெனில் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட சரணாலயத்திற்குள் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளின் அளவினை தனித்தனியே இனங்காண்பதற்கு இதுவரையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனில் அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அரச வரைபடங்களுக்கு அமைவாக இனங்காணப்பட்டுள்ள மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட சரணாலயத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவானது ஹெக்டேர்களில் தனித் தனியே யாதென்பதையும்;
(ii) அரச வரைபடங்களுக்கு அமைவாக இனங்காணப்பட்டுள்ள மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இனங்காணப்பட்டுள்ள காணிகளின் அளவுகளுக்கு இடையில் வேறுபாடு காணப்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-24
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-06-06
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks