E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1620/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

    1. 1620/2023

      கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2021 ஆம் ஆண்டளவில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பதிவு செய்யப்பட்டுள்ள 152 கூட்டுப்பசளை தயாரிப்புத் தளங்களின் மாதாந்த கொள்திறன் 18514 மெட்ரிக்தொன்னாக காணப்பட்டபோதிலும், இத்தளங்களிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட மாதாந்த கொள்திறனை பூர்த்தி செய்ய முடியாமல் அவை குறைபயன்பாட்டு நிலையில் உள்ளன என்பதையும்;

      (ii) இவற்றில் 84 கூட்டுப்பசளை தயாரிப்புத் தளங்களின் கூட்டுப்பசளையின் தரத்தை, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் 1246 ஆம் இலக்க தரநியமத்தின் பிரகாரம் பரிசோதிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுப்பசளை தயாரிப்புத் தளங்களின் மத்தியில் காணப்படும் குறைபயன்பாடுள்ள தளங்களை, உச்சமட்ட கொள்திறனுடன் இயங்கச் செய்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்கள் யாவை;

      (ii) எதிர்காலத் திட்டங்கள் இல்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை;

      (iii) மேலே (அ)(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் கூட்டுப்பசளைகளின் தரத்தை பரிசோதிப்பது தொடர்பில் பின்னாய்வுகளை மேற்கொள்ளாமைக்கான  காரணங்கள் யாவை;

      (iv) இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks