E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1622/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

    1. 1622/2023

      கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2020 ஆம் ஆண்டில் நீதவான் நீதிமன்றங்களின் மூலம் அபராதத் தொகையாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட ரூ 7,676,874/- பெறுமதியான 154 காசோலைகளை மேற்படி அதிகாரசபை உரிய நேரத்தில் தீர்வையாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் அக் காசோலைகள் காலாவதியாகி மீண்டும் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்குறிப்பிட்ட 154 காசோலைகளை உரிய காலப்பகுதியில் தீர்வையாக்குவதற்கு மேற்படி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியமைக்கு ஏதுவான விடயங்கள் யாவை என்பதையும்;

      (iii) இந்த விடயம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய ஆட்கள் இனங்காணப் பட்டுள்ளனரா என்பதையும்;

      (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (v) மீண்டும் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட 154 காசோலைகளுக்குப் பதிலாக இன்றளவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்துள்ள காசோலைகளின் எண்ணிக்கையும் அவ்வொவ்வொரு காசோலையினது பெறுமதியும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-23

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks