E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1643/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

    1. 1643/2023

      கௌரவ மிலான் ஜயதிலக்க,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள விசேட தேவைகளைக் கொண்டவர்களின்/அங்கவீனமுற்றோரின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவர்களுக்காக செலுத்தப்படும் மாதாந்தக் கொடுப்பனவு எவ்வளவென்பதையும்;

      (iii) அக்கொடுப்பனவைச் செலுத்துவதற்காக வருடாந்தம் செலவிடப்படும் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அரச மற்றும் தனியார் துறைகளில் கட்டிடங்களை நிர்மாணிக்கும்போது மேற்படி நபர்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தொடராய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

      (ii) மேற்படி தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாமல் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-23

கேட்டவர்

கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-23

பதில் அளித்தார்

கௌரவ அனுப பஸ்குவல், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks