E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1675/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1675/2023

      கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு வகையான கைதிகளுக்கும் வழங்கப்படும் உணவின் அளவு தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iii) இன்றளவில் இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iv) அந்த எண்ணிக்கையைக் கடந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks