E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1682/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1682/2023

      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பள்ளமடு - சன்னார் பிரதேசத்தில் அரச காணிகள் பெருமளவில் காணப்படுகின்றன என்பதையும்;

      (ii) அக்காணிகளை அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது என்பதையும்;

      (iii) பலதரப்பட்ட நபர்கள் அக்காணிகள் தொடர்பான வரைபடங்கள், ஆவணங்கள் அல்லது சான்றுகள் எதுவுமின்றி உறுதிகளை மாத்திரம் சமர்ப்பித்து உரிமை கோருகின்றார்கள் என்பதையும்;

      (iv) அவ்வுறுதிகளின் திட்பநுட்பத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பிரதேச செயலாளரினால் காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்திற்கு அவை அனுப்பப்பட்டுள்ளன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணிகளின் அளவு யாதென்பதையும்;

      (ii) சன்னார் மற்றும் ஈச்சளவக்கை பிரதேச மக்களுக்கு அப்பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் வழங்கப்படுமா என்பதையும்;

      (iii) வரைபடங்கள், ஆவணங்கள் அல்லது சான்றுகள் எதுவுமின்றி காணப்படுகின்ற உறுதிகள் மாத்திரம் அக்காணிகள் தொடர்பில் செல்லுபடியாகுமா என்பதையும்;

      (iv) காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட உறுதிகள் தொடர்பான தீர்மானங்கள் எத்திகதியில் வழங்கப்படும் என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks