E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1719/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 1719/2023

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மின்சார சபையில் இன்றளவில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அவ்வூழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காகவும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காகவும் செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி காலப்பகுதியில் சபைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கப் பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) இவ்வூழியர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை என்பன யாவையென்பதையும்;

      (iii) இலங்கை மின்சார சபையில் போதியளவு ஊழியர்கள் உள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை ஆட்சேர்ப்பதனைக் குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-17

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-21

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks