E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1761/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

    1. 1761/2023

      கௌரவ சமன்பிரிய ஹேரத்,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமானதும் இதுவரை பயன்படுத்தப்படாததுமான காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;

      (ii) அத்திணைக்களத்திற்குச் சொந்தமான ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள காணிகள் தொடர்பில் ஆவணமொன்று பேணப்படுகின்றதா என்பதையும்;

      (iii) திணைக்களத்தின் காணிகள் இன்றளவில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி காணிகளை குத்தகைக்கு வழங்கும் போது சரியான முறையியல் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) மேற்படி காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் வருடாந்தம் ஈட்டப்படுகின்ற குத்தகை வருமானம் எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks