E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1804/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

    1. 1804/2023

      கௌரவ குமாரசிறி ரத்நாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மொனராகலை மாவட்டத்தில், மாகாண சபை நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி பாடசாலைகளில் அதிபர், பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர்களாக சேவையாற்றி வருகின்ற இலங்கை அதிபர் சேவையின் தரங்களைச் சோ்ந்த அலுவலர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது;

      (iii) மேற்படி பாடசாலைகளுக்கு மத்தியில் அதிபர் தரங்களைச் சோ்ந்த அதிபர்கள் சேவையாற்றுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கையும் பதில் அதிபர்கள் சேவையாற்றுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கையும் தனித்தனியே யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அதிபர் பதவியில் பதில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை இலங்கை அதிபர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை அறிவாரா;

      (ii) ஆமெனில், மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது;

      (iii) மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனில், அதற்கான காரணங்கள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-25

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks