பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1806/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 1806/2023

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— முதலீட்டு மேம்பாடு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இன்றளவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவை;

      (iii) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மேற்படி ஒவ்வொரு சுதந்திர வர்த்தக வலயத்திலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;

      (iv) வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது அத்தியாவசியமென்பதனால் மேற்குறிப்பிட்ட சுதந்திர வர்த்தக வலயங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-22

பதில் அளித்தார்

கௌரவ திலும் அமுனுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks