E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2216/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2216/ ’12

       

      கெளரவ சஜித் பிரேமதாஸ,— நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     மகிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முதல் ஐந்து ஆண்டுகளில் வட்டியை மட்டும் செலுத்துவதற்கான வசதியைக் கொண்ட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் உரிய வீடமைப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;

      (ii) இதுவரை மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு்ள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) வீடமைப்புக் கடன் வழங்கப்படும்போது பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-06

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-06

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks