E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2223/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2223/ ’12

      கௌரவ சஜித் பிரேமதாச,—  நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ)    மஹிந்த சிந்தனை தொலை நோக்குக் கொள்கைகளில் “සැමට නිවසක්-හිතට සෙවණක්” வேலைத் திட்டத்தின் கீழ், கொழும்பு நகரில் குடிசைவாழ் மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 40,000 வீட்டுக்கூறுகளடங்கிய 20 மாடி வீட்டுத் திட்டங்கள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக 500 கோடி ரூபாவை ஆரம்ப மூலதனமாக அடுத்து வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா ?

      (ஆ) (i) மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் 500 கோடி ரூபா எந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது என்பதையும்;

      (ii) குறித்த பணத்தைக் கொண்டு இன்றளவில் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாடிவீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) இன்றளவில் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள  மாடிவீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ள மாடிவீட்டுத் திட்டங்களில் இன்றளவில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-10-12

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-09

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks