பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2012/2023
கௌரவ யதாமிணீ குணவர்தன,— நிர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மகாவலி, வளவை மற்றும் கல்ஓயா போன்ற ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதனூடாக மேற்படி ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் வெள்ள நிலைமை கட்டுப்படுத்தப் பட்டதனால் கங்கைகளை அண்டியதாக வாழும் மக்களுக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் வருடாந்தம் ஏற்படும் பாதிப்பு குறைவடைந்துள்ளது என்பதையும்;
(ii) களனி கங்கையை சார்ந்ததாக பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டமொன்று இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வெள்ள இழப்பீட்டு நடவடிக்கைகளுக்காக கடந்த 05 வருட காலப்பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதித்தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படித் தொகையில் களனி கங்கையின் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதித்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) கடந்த 05 வருட காலப்பகுதியில் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) அவர்களுள் களனி கங்கையின் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(இ) (i) களனி கங்கையின் வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதித் தொகை போதுமானதா என்பதையும்;
(ii) களனி கங்கையை அண்டியதாக ஏற்படும் வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் கருத்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-22
கேட்டவர்
கௌரவ யதாமிணீ குணவர்தன, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-03-22
பதில் அளித்தார்
கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks