பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2274/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிர்மாண, பொறியியல் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) டெங்கோ சேவா எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்பு புஜீமா ஸ்டேட் கோபரேஷன் கம்பனி எனும் பெயரில் நடாத்தப்பட்டுவரும் நிறுவனத்திற்குச் சொந்தமான கொட்டதெனியாவ வேலைத்தலம் இப்போது செயற்பட்டுவருகிறதா என்பதையும்;
(ii) அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இவர்களின் சம்பளம் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான இயந்திரப் பொறிகள் மற்றும் வாகனங்கள் யாவை என்பதையும்;
(ii) இந்த இயந்திரப் பொறிகள் மற்றும் வாகனங்களின் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) இவ் வேலைத்தலத்தை அமைவிடத்திலிருந்து அகற்றுவதற்கோ, இயந்திரப் பொறிகளை அகற்றி ஏல விற்பனை செய்வதற்கோ, விற்பனை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) ஆரம்பித்த வருடம் முதல் இதுவரை இந்த வேலைத்தலத்திற்குக் கிடைத்த இலாபம் அல்லது நட்டம் வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) இத்தொழிற்சாலையை அரசின் அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அது எப்போது தொடக்கம் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-23
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-23
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks