E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2526/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 2526/2023

      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2020 ஆம் ஆண்டில் பட்டதாரி பயிலுநர்களாக பிரதேச செயலகங்களுக்கு இணைக்கப்பட்ட பட்டதாரிகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

      (ii) இவர்கள் பாடசாலை விடுமுறை காலத்தில் மீண்டும் அரசாங்க நிறுவனங்களுக்கு அழைக்கப்படுகின்றனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்கள் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனரா இல்லாவிடின் அபிவிருத்தி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனரா என்பதை அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி பட்டதாரி பயிலுநர்கள் கடமையாற்றும் அடிப்படை;

      (ii) இவர்கள் பதவியில் நிரந்தரமாக்கப்படும் திகதி;

      யாதென்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-22

பதில் அளித்தார்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks