பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2529/2023
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் 100,000 தொழில்வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2020 முதல் 2021 வரை வழங்கப்பட்டுள்ள தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இன்றளவில் வழங்கப்படாதுள்ள எஞ்சிய தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொறிமுறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுநர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற அடிப்படையிலும் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) கிழக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iv) திருகோணமலை மாவட்டத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு வாரியாக வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-09
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-05-09
பதில் அளித்தார்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks