E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2531/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1. 2531/2023
      கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் யானை - மனித மோதல் நிலவுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (ii) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
      (iii) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
      (iv) மேற்படி அமைக்கப்பட்ட யானை வேலிகளின் மொத்த நீளம் எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்குறிப்பிடப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை வேலிகள் அமைக்கப்படாதுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
      (ii) அப்பிரதேசங்களில் யானை வேலிகளை அமைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iii) இன்றளவில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை மேலும் நீடிப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-07

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-05

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks