பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2693/2023
கௌரவ கே.பீ.எஸ். குமாரசிறி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹோமியோபதி மருத்துவ முறையானது பக்கவிளைவுகள் அற்ற, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாக இலங்கையில் பிரசித்தி பெற்றுள்ளது என்பதையும்;
(ii) இத்தகைய மருத்துவ சிகிச்சைகளை அளித்துவருகின்ற சிறந்த ஹோமியோபதி வைத்தியர்கள் பலவருட காலமாக பதிவுசெய்யப்படாது உள்ளனர் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) தம்மை பதிவு செய்துகொள்வதற்காக பல வருடங்களாக காத்திருக்கும் ஹோமியோபதி வைத்தியர்களைப் பதிவுசெய்ய தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;
(ii) செய்முறைப் பரீட்சை ஒன்றினூடாக அந்த வைத்தியர்களின் புலமையைப் பரிசீலித்து இவர்களைப் பதிவுசெய்ய முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) ஹோமியோபதி மருத்துவ முறையை முன்னேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) ஹோமியோபதி சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுமா என்பதையும்;
(iii) ஹோமியோபதி பல்கலைக்கழகத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-08-25
கேட்டவர்
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-09-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks