E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2879/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 2879/2023

      கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையிலான ஒவ்வொரு வருடத்திலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபம்/ நட்டம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) 2023 ஆம் ஆண்டுக்காக மேற்படி கூட்டுத்தாபனம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு செலுத்தியுள்ளது என்பதனை அறிவாரா என்பதையும்;

      (iii) அதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு சேவைத் தொகுதியின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iv) பொதுத் திறைசேரியின் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிருவாகத்தினரால் ஊக்குவிப்புக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-09

பதில் அளித்தார்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks