E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2932/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

    1. 2932/2023

      கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொலிஸ் அலகு தாபிக்கப்பட்ட திகதி மற்றும் அகற்றப்பட்ட திகதி யாதென்பதையும்;

                 (ii)    மேற்படி அலகு அகற்றப்படுவதற்கு ஏதுவாக அமைந்த காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையில் இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரித்துள்ள பின்னணியில் மேற்குறிப்பிட்ட பொலிஸ் அலகு அகற்றப்பட்டமையானது சட்டரீதியான மற்றும் தர்க்க ரீதியான அடிப்படையின்றி மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அப்பொலிஸ் அலகினை மீண்டும் தாபிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-05-10

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks