E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2934/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

    1. 2934/2023

      கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக அத்தாக்குதல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) குற்றஞ் சாட்டப்பட்டுள்ள மேற்படி ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தரினதும் பெயர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வகித்த பதவி மற்றும் சேவை நிலையம் என்பவை தனித்தனியே யாவையென்பதையும்;

      (iii) மேற்படி உத்தியோகத்தர்களில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரினதும் பெயர், சேவை நிலையம் என்பன தனித்தனியே யாவையென்பதையும்;

      (iv) மேற்படி உத்தியோகத்தர்களுள் சில உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ் சேவையில் உயர் பதவிகளை வகிப்பதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அல்லது விசாரணை அறிக்கைகளில் மாற்றங்களைச் செய்வதற்கான சாத்தியம் இருப்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்பைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-06-22

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks