பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2936/2023
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில், அம்பகெலே பிரதேசத்தில் தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான மரபணு வள நிலையமொன்று இருப்பதை அறிவாரா என்பதையும்;
(ii) 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அந்நிலையத்தில் உள்ள பால் தரக்கூடிய பசுக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(iii) 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி பசுக்களிடமிருந்து பால் கறக்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட நிலையத்தின் பால் வருமானம் முறையாக கணக்கு வைக்கப்படவில்லை என்பது தொடர்பில் கணக்காய்வு வினவல்கள் உள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) அது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-04
கேட்டவர்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-10-04
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks