E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2326/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

    1. 2326/ ’12

       கெளரவ சஜித் பிரேமதாச,— உயர் கல்வி அமைச்ரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2006-09-11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை வளர்ச்சியடையச் செய்வதாகவும்;

                (ii)     ஏனைய மருத்துவ பீடங்களின் 2005-2006 மாணவர் குழுக்களுடன் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவ மாணவியர்களுக்கும் கட்டுறுபயில்வு நியமனங்கள் வழங்கப்படுமெனவும்;

      சனாதிபதி அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார் என்பதை அவர் அறிவாரா? 

      (ஆ) (i) ஏனைய மருத்துவ பீடங்களில் காணப்படும் வசதிகள் ரஜரட்ட மருத்துவப் பீடத்திலும்  போதியளவு தாபிக்கப்பட்டுள்ளதா;

      (ii) பேராசிரியர் சிகிச்சைப் பயிற்சிகளுக்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தற்போது ரஜரட்ட மருத்துவ பீடத்தில் தாபிக்கப்பட்டுள்ளதா;

      (iii) 2011 மே மாதத்தில் பேராசிரியர் சிகிச்சை பயிற்சிக்காக அனுப்ப வேண்டியிருந்த மாணவர்களின் எண்ணிக்கை யாது;

      (iv) தற்போது இவர்கள் மேற்படி பயிற்சியை ஆரம்பித்துள்ளார்களா;

      (v) இல்லையெனில், இதற்கு மாணவர்களை அனுப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-15

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks