E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3095/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

    1. 3095/2023

      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தினால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்குறித்த கடன் பெறப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட கடன், பயன்மிக்க வகையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) மேற்குறித்த விமான நிலையத்தை பொருளாதாரத்திற்கு சுமையின்றி பேணிச் செல்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks