E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3098/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

    1. 3098/2023

      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அவ்வழக்குத் தீர்ப்பின் மூலம் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரினதும் பெயர், முகவரி, தற்போது வகிக்கும் பதவி மற்றும் மேற்குறிப்பிட்ட வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வகித்த பதவி மற்றும் சேவை நிலையம் என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) அந்நபர்கள் இன்றளவிலும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றமையானது மேற்படி வழக்குத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக அமையுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-19

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-14

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks