E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3101/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

    1. 3101/2023

      கௌரவ குமாரசிறி ரத்னாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) இப்பாடசாலைகளுள் தரப்படுத்தப்பட்ட அதிபர்களும் பதிற் கடமையாற்றும் அதிபர்களும் சேவையாற்றுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கையானது தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) பதிற் கடமையாற்றும் அதிபர்கள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு மாகாண அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பதிற் கடமையாற்றும் அதிபர்களை அதிபர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், இன்றளவில் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) இனிவரும் காலங்களில் அதிபர் பதவியில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பும் போது போட்டிப் பரீட்சை நடாத்தி, தகைமையுடையவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அப்போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-10

கேட்டவர்

கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks