E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3104/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 3104/2023

      கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி நியமனங்கள் எவ்வடிப்படையில் வழங்கப்பட்டதென்பதையும்;

      (iii) மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iv) மேற்படி ஆசிரிய உதவியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ள சம்பள அளவுத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிட்ட ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவையின் 3(I) ஆம் தரத்தின் (ஆ) பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் வழங்குகையில் தொண்டர் ஆசிரியர்களாக 2013.07.01 ஆந் திகதி தொடக்கம் 2018.08.01 ஆந் திகதி வரை சேவையாற்றிய காலப்பகுதி இவர்களின் சேவைக்காலத்துக்கு சேர்க்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்ட திகதியினை இவர்களின் ஆசிரியர் சேவையின் ஆரம்ப நியமனத் திகதியாக கருதுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks