E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3107/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 3107/2023

      கௌரவ சிவஞானம் சிறீதரன்,— சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யாழ்ப்பாணம், நெடுந்தீவில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) 2010 தொடக்கம் 2020 வரையிலான ஒவ்வொரு ஆண்டிலும் நெடுந்தீவுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iii) சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேற்படி சுற்றுலாத் தளங்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி (அ)(i)இல் குறிப்பிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் தற்போது புனரமைக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி சுற்றுலாத் தளங்களை புனரமைப்புச் செய்வதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) இதுவரையில் மேற்படி சுற்றுலாத் தளங்கள் புனரமைக்கப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) நெடுந்தீவில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களை முறையாக பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-27

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks