E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3171/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 3171/2023

      கௌரவ தயாசிறி ஜயசேக்கர,—  கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     அச்சிடல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கடதாசி உள்ளிட்ட உபகரணங்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு அச்சுத் துறை சார்ந்த வணிகங்களின் செயற்பாடுகள் நலிவடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதையும்;

      (ii) இதன் விளைவாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதையும்;

      (ii) இன்றளவில் அரச மற்றும் தனியார் துறையால் மாதாந்தம் உற்பத்தி செய்யப்படும் கடதாசியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) கடதாசி இறக்குமதியைக் குறைத்து, இந்நாட்டில் கடதாசியை உற்பத்தி செய்வதற்காக தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?


       

கேட்கப்பட்ட திகதி

2023-07-06

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-22

பதில் அளித்தார்

கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks