E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3172/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 3172/2023

      கெளரவ தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடந்த 5 ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் அளவு மற்றும் இதற்கென செலவிடப்பட்ட தொகை ஆண்டு வாரியாக தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) இக்காலப் பகுதியில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்த இறக்குமதியாளர்களின் விபரங்கள் யாவை என்பதையும்;

      (iii) இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தை பரிசோதனை செய்யும் நிறுவனம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி காலப் பகுதியில் உடலுக்குத் தீங்கான தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனின், மேற்படி ஒவ்வொரு இறக்குமதியாளரினதும் பெயர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி தேங்காய் எண்ணெய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks