பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3231/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 3231/2023

      கௌரவ நிரோஷன் பெரேரா,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு மீன் பிடிப் படகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடுகள் யாவையென்பதையும்;

      (iii) அதன்போது கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் மீன்பிடிப் படகுகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் இலங்கை கடற்படையினரால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அப்பரிந்துரைகள் யாவை என்பதையும்;

      (iii) அவற்றில் தற்போது நடைமுறைப்படுத்தப்படாதுள்ள பரிந்துரைகள் யாவை என்பதையும்;

      (iv) அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks